2010-08-13 16:05:39

புனித அகுஸ்தீன் திருப்பண்டங்களைத் தரிசிக்க வட ஆப்ரிக்கர்கள் திருப்பயணம்


ஆக.13,2010: புனித அகுஸ்தீனின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டிருக்கும் இத்தாலிய நகரங்களுக்கு முதன்முறையாக அல்ஜீரியா, மொராக்கோ, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

வட ஆப்ரிக்காவின் ஹிப்போ நகரைச் சேர்ந்த புனித அகுஸ்தீனின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டிருக்கும் மிலான் மற்றும் பவியா நகரங்களுக்கு இம்மாதம் 26 முதல் 28 வரை இவர்கள் திருப்பயணம் மேற்கொள்வர்.

இப்புனிதரது திருப்பொருட்கள் வைக்கப்ப்டடுள்ள san Pietro in Ciel d’Oro பசிலிக்காவில் புனித அகுஸ்தீனின் விழாவாகிய ஆகஸ்ட் 28ம் தேதி திருப்பலி நிகழ்த்தி இத்திருப்ப யணத்தை நிறைவு செய்வர்.

புனித அகுஸ்தீன் 387ம் ஆண்டில் மிலானில் புனித அம்புரோசியாரால் திருமுழுக்குப் பெற்றார்.








All the contents on this site are copyrighted ©.