2010-08-13 16:04:33

தேவநிந்தனை சட்டத்தை எதிர்த்து பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் கறுப்பு தினம்


ஆக.13,2010: பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் பலவகையானப் பாகுபாடுகளைக், குறிப்பாக தேவநிந்தனை சட்டத்தை எதிர்த்து அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் இப்புதனன்று கறுப்பு தினத்தைக் கடைபிடித்தனர்.

பாகிஸ்தான் சுதந்திரம் அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது ஆகஸ்ட் 11ம் தேதி அந்நாட்டின் தந்தை என அழைக்கபப்டும் முகமது அலி ஜின்னா ஆற்றிய உரையில், அப்புதிய நாட்டில் எல்லா மதத்தினருக்கும் சுதந்திரமும் சமத்துவமும் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

எனினும், அந்நாட்டில் தேவநிந்தனை சட்டத்தின்கீழ் கிறிஸ்தவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி வருவதைச் சுட்டிக்காட்டிய கிறிஸ்தவர்கள், அச்சட்டம் அகற்றப்பட வேண்டுமென்று இக்கறுப்பு தினத்தில் கோரிக்கைகளை எழுப்பினர்.

இதற்கிடையே, பாகிஸ்தானில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்குத் திருச்சபையின் பிறரன்பு நிறுவனங்கள் அவசரகால உதவிகளைச் செய்து வருகின்றன.

ஆகஸ்ட் 14, பாகிஸ்தானின் சுதந்திர தினமாகும்.







All the contents on this site are copyrighted ©.