ஆகஸ்ட்12,2010. அன்பர்களே, 15க்கும் 24 க்கும் இடைப்பட்ட வயதுடையோரை இளையோர் என்று ஐக்கிய
நாடுகள் நிறுவனம் கணித்துள்ளது. இன்று உலகிலுள்ள சுமார் 620 கோடி மக்களுள் 18 விழுக்காட்டினர்
இளையோர். வளரும் நாடுகளில் இவர்கள் 87 விழுக்காட்டினர். உலகில் இந்த இளையோர் மத்தியிலான
வேலை வாய்ப்பின்மை 2007ல் 11.9 விழுக்காடாக இருந்தது. இது 2009ல் 13 விழுக்காடாக உயர்ந்தது.
இந்த இளையோரின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஐ.நா. நிறுவனம், இவ்வியாழனன்று பன்னாட்டு இளையோர்
ஆண்டைத் தொடங்கியுள்ளது. உரையாடலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதலும் என்ற தலைப்பில்
உலக சமுதாயம் இவ்வாண்டைக் கடைபிடிக்கும்வேளை கத்தோலிக்கத் திருச்சபையும் இளையோர் ஆண்டைச்
சிறப்பித்து வருகிறது. இதனை முன்னிட்டு வேலூர் ஆயரும் தமிழக இளைஞர் பணிக்குழுவின் தலைவருமான
மேதகு ஆயர் சௌந்தரராஜூ அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.