2010-08-12 16:21:53

Taize இயக்கத்திற்கு திருப்பீடச் செயலர் வாழ்த்துக்கள் அனுப்பியுள்ளார்


ஆகஸ்ட் 12, 2010 கிறிஸ்துவ ஒன்றிப்பைப் பலப்படுத்தும் இயக்கமாகச் செயல்பட்டு வரும் Taize இயக்கத்திற்கு திருப்பீடச் செயலர் வாழ்த்துக்கள் அனுப்பியுள்ளார்.
இப்புதனன்று வத்திகான் செய்தித் தாளான L’Osservatore Romanoவில் வெளியான செய்தியில், Taize இயக்கம் ஆரம்பமான 70ம் ஆண்டு நிறைவையும், இவ்வியக்கத்தின் நிறுவனர் சகோதரர் Roger Schutz மறைந்த ஐந்தாம் ஆண்டு நினைவையும் ஓட்டி, இவ்வியக்கத்தைக் குறித்தும், சகோதரர் Roger குறித்தும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிஸியோ பெர்த்தோனே என்று கூறப்பட்டுள்ளது.
திருப்பீடச் செயலர் மட்டும் அல்லாமல், கான்ச்டான்டிநோப்புள் முதுகுல முதல்வர், கான்டர்பரி பேராயர் ஆகியோரும் தெரிவித்துள்ள வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் இச்செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.திருத்தந்தையர் 23ம் ஜான், இரண்டாம் ஜான் பால் ஆகியோரும், திருத்தந்தை 16ம் பெனடிக்டும் Taize இயக்கத்தின் மீது ஈடுபாடு காட்டி வந்துள்ளதை இச்செய்தித்தாள் சுட்டிக் காட்டியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.