2010-08-11 15:51:36

பன்றிக்காய்ச்சல் நோய்க் கிருமிகளின் தீவிரம் குறைந்துள்ளது - ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைமை இயக்குனர்


ஆகஸ்ட் 11, 2010 உலகின் பல பகுதியிலும் மக்களை அதிகம் பாதித்து வந்த பன்றிக்காய்ச்சல் நோய்க் கிருமிகளின் தீவிரம் குறைந்துள்ளது என்று ஐ.நா. வின் உலக நலவாழ்வு நிறுவனத்தின் (WHO) தலைமை இயக்குனர் Margaret Chan கூறினார்.

பன்றிக்காய்ச்சல் நோயின் தற்போதைய நிலையைக் குறித்து இச்செவ்வாயன்று கூடிய கூட்டம் ஒன்றில் இவ்வாறு கூறிய Margaret Chan, இந்நோயின் தீவிரம் குறைந்து விட்டாலும், பொதுவாகவே இவ்வாறான நோய் கிருமிகள் இன்னும் பல வழிகளில் தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.

ஓராண்டுக்கு முன் ஆரம்பமான இந்த நோய், ஏறத்தாழ 120 நாடுகளில் உள்ள மக்களை எட்டு வாரங்களில் சென்று அடைந்ததாகவும், பின்னர் இந்த நோய் கிருமிகள் உலகின் எல்லா நாடுகளுக்கும் பரவியது என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.