2010-08-11 15:45:15

இந்தியாவின் திருப்பீடத்தூதர் பேராயர் சால்வாத்தொரே பெனாக்கியோ இந்தியாவை அடைந்தார்


ஆகஸ்ட் 11, 2010 இந்தியாவின் திருப்பீடத்தூதராக மே மாதம் நியமனம் பெற்ற பேராயர் சால்வாத்தொரே பெனாக்கியோ இத்திங்களன்று இந்தியாவை அடைந்தார்.

இலத்தீன் வழிபாட்டு முறை பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ, சீரோ மலபார், மற்றும் சீரோ மலன்காரா பேராயர்கள் புது டில்லியில் இத்திங்களன்று வந்திறங்கிய திருப்பீடத் தூதரை விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றனர்.

தான் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை என்றும், இந்தியாவில் உள்ள அனைத்துத் திருச்சபைகளுடனும் இணைந்து தான் உழைக்க விரும்புவதாகவும் திருப்பீடத்தூதர் பேராயர் பெனாக்கியோ கூறினார்.

57 வயதான பேராயர் பெனாக்கியோ தாய்லாந்து, சிங்கப்பூர், கம்போடியா ஆகிய நாடுகளின் திருப்பீடத் தூதராக கடந்த ஏழு ஆண்டுகளாக பணி புரிந்து வந்தவர். அவர் இந்திய அரசுத் தலைவர் பிரதிபா படிலைச் சந்தித்து, தன் நம்பிக்கைச் சான்றிதழைச் சமர்பித்த பின், தன் பணிகளை ஆரம்பிப்பார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.