2010-08-07 15:35:02

போர்க்காலக் கற்பழிப்புகள் கண்டுகொள்ளப்படுவதில்லை, ஐ.நா.அதிகாரி கவலை


ஆக.07,2010. போர்க்காலக் கற்பழிப்புகள், உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய சவால்களாக அமைந்திருக்கும் விவகாரங்களில் ஒன்றாக இருக்கின்றன என்று ஐ.நா.அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார்.

இந்தப் பாலியல் வன்செயல்கள், போர்க்காலக் குற்றங்களாக மிகக் குறைவாகவே கண்டனம் தெரிவிக்கப்படுகின்றன என்று, சண்டை இடம் பெறும் பகுதிகளில் பாலியல் வன்செயல்களுக்கான ஐ.நா.பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி Margot Wallström கூறினார்.

இந்த நவீனக்காலச் சண்டைகளில் கற்பழிப்பு நிகழ்வுகள் மிக எளிதாக இடம் பெறுகின்றன என்று நியுயார்க்கில் நிருபர்களிடம் குறிப்பிட்ட Wallström, உலகில் பரவலாகவும் திட்டமிட்டும் இடம் பெறும் இந்தப் பாலியல் கொடுமைகள் இவற்றிற்குப் பலியாகுவோருக்கும் மனித சமுதாயத்துக்கும் எதிராகச் செய்யப்படும் குற்றங்கள் எனக் கூறினார்







All the contents on this site are copyrighted ©.