2010-08-07 15:32:35

கொலம்பியாவில் அமைதியைக் கொண்டுவருவதற்கு வத்திக்கானும் ஆயர்களும் இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளனர்


ஆக.07,2010. தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் பல ஆண்டுகளாக இடம் பெற்று வரும் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வத்திக்கானும் அந்நாட்டு ஆயர்களும் இணைந்து செயல்படுவதற்கான விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

இத்தீர்மானம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய கொலம்பிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ruben Salazar, கொலம்பியாவில் அரசுக்கும் FARC புரட்சிக்குழுவுக்குமிடையே நடைபெற்று வரும் சண்டையின் கூறு யாரையும் எளிதில் புண்படுத்தக்கூடிய விவகாரங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.

கொலம்பியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுத்தலைவர் Juan Manuel Santosன் ஒப்புதல் கிடைத்தவுடன் திருச்சபை FARC புரட்சிக்குழுவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கும் எனக் கூறினார் பேராயர்.

கொலம்பிய கம்யூனிச கட்சியின் இராணுவ அமைப்பான இந்த FARC புரட்சிக்குழு 1964ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்குழுவுக்கும் அரசுக்குமிடையே ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக மோதல்கள் இடம் பெற்று வருகின்றன







All the contents on this site are copyrighted ©.