2010-08-06 16:20:15

ஏழ்மையைப் போக்குவதற்கு ஏழைகளின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி


ஆக.06,2010. உலகில் ஏழ்மையால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமெனில் அவர்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென்று ஐ.நா.வின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

2015ம் ஆண்டுக்குள் மில்லெனேய வளர்ச்சித்திட்ட இலக்குகளை அடைவது குறித்த உலகத் தலைவர்களின் விவாதங்களில், தேவையிலிருந்து விடுதலை, பயத்தினின்று விடுதலை ஆகிய இவையிரண்டுக்கும் இடையேயான உறவு முக்கிய இடம் பெற வேண்டுமென்று ஐ.நா.மனித உரிமைகள் அவையின் உயர் இயக்குனர் நவநீதம்பிள்ளை பரிந்துரைத்தார்.

அடுத்த மாதத்தில் ஐ.நா.தலைமையகத்தில் உலகத் தலைவர்கள் மில்லெனேய வளர்ச்சித்திட்ட இலக்குகளை அடைவது குறித்த விவாதிக்கவுள்ளனர்.

உலகின் பல இடங்களில், குறிப்பாக ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வறுமை இன்னும் அதிகமாகக் காணப்படுகின்றது என்று நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.