2010-08-05 14:26:58

ஆகஸ்ட் 06 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1825 - பொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.

1845 – இரஷ்ய புவியியல் கழகம் செயின்ட் பீட்டர்ஸபர்கில் உருவாக்கப்பட்டது.

1945 - இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்க ஐக்கிய நாடு, சின்னப்பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்டை வீசியது. அதில் ஏறக்குறைய 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.

1952 - இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது.

1960 - அமெரிக்க ஐக்கிய நாடு கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததையடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.

1962 - ஜமெய்க்கா பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.

1964 – அமெரிக்க ஐக்கிய நாட்டு நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட ஏறக்குறைய 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியுஸ் என்ற மரம் வெட்டப்பட்டது.

1990 – ஈராக், குவைத்தை ஆக்ரமித்ததையொட்டி ஈராக்கிற்கு எதிரான சர்வதேச பொருளாதாரத் தடை ஐ.நா.பாதுகாப்பு அவையால் விதிக்கப்பட்டது.

1996 – செவ்வாய் கிரகத்திலிருந்து தோன்றியதாகக் கருதப்படும் ALH 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.

2002 – தமிழகத்தின் ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் இறந்தனர்.

இறப்புகள் –

258 - புனித திருத்தந்தை 2ம் சிக்ஸ்துஸ்

523 - புனித திருத்தந்தை ஹோர்மிஸ்தாஸ்

1458 - திருத்தந்தை 3ம் கலிஸ்துஸ்

1925 - இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சர் சுரேந்திரநாத் பானர்ஜி

1978 - திருத்தந்தை ஆறாம் பவுல்

ஆகஸ்ட் 6 ஆண்டவரின் உருமாற்றம்








All the contents on this site are copyrighted ©.