2010-08-04 16:10:19

திருச்சபைக்கு எதிரானத் தாக்குதல்களுக்குத் தகுந்த பதில்களை அளிப்பது திருச்சபைக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதைக் காட்டுகிறது - திருத்தந்தை


ஆக.04,2010. திருச்சபையும் அதன் தலைவர்களும் நியாயமற்ற மற்றும் ஆதாரமற்ற தாக்குதல்களை அடிக்கடி எதிர்நோக்கி வரும்வேளை அவற்றுக்குத் தகுந்த பதில்கள் அளிப்பது இறைவார்த்தைக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதன் அடையாளமாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இவ்வாறு செயல்படுவது, தூய வாழ்வு வாழ்வதற்கான உறுதியையும், உண்மையில் பிறரன்புக்கு அர்ப்பணிப்பதையும் காட்டுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

அமெரிக்க ஐக்கிய வாஷிங்டனில் தனது 128வது மாநாட்டை நடத்தி வரும் Knights of Columbus என்ற திருச்சபையின் புகழ்வாய்ந்த சகோதரத்துவ பக்த அமைப்புக்குத் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ள செய்தியில் திருத்தந்தையின் கருத்துக்களை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Knights of Columbus என்ற அமைப்பு, மனித வாழ்வின் தூய்மைக்கும் திருமணத்தின் இயல்பான தன்மைக்கும் சான்றாய் இருந்து வருவதற்கும், கத்தோலிக்கப் பொதுநிலையினர் மத்தியில் விசுவாச வாழ்வை ஊக்குவித்து வருவதற்கும் திருத்தந்தை நன்றி தெரிவிப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

Knights of Columbus அமைப்பு நடத்தும் மூன்று நாள் மாநாடு இவ்வியாழனன்று நிறைவடைகின்றது







All the contents on this site are copyrighted ©.