2010-08-04 16:19:15

தமிழகத்தில் 972 இடங்களில் இரசாயனம் கலந்த குடிநீர்


ஆக.04,2010. தமிழகத்தில் 972 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 1,44,000 இடங்களில் குடிநீரில் இரசாயன கலப்பு இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் அகதா சங்மா கூறினார்.

நாடு முழுவதும் நிலத்தடி நீர் மூலம் குடிநீர் பெறும் 1,44,000 இடங்களில் ஆர்சனிக், புளோரைடு, இரும்பு, நைட்ரேட் மற்றும் உப்புத்தன்மையால் நீர் மாசுபட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் புளோரைடு கலந்துள்ளதால் 20 இடங்களும், இரும்புத்தன்மையால் 669 இடங்களும், உப்புத்தன்மையால் 278 இடங்களும், நைட்ரேட் கலப்பால் 5 இடங்களும் என மொத்தம் 972 இடங்களில் குடிநீரில் ரசாயன கலப்பு உள்ளது என்றும் அகதா சங்மா மாநிலங்களவையில் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.