2010-08-04 16:11:36

கியூபாவில் சில அரசியல் கைதிகளின் விடுதலை அந்நாட்டிற்கு நம்பிக்கை தரும் அடையாளமாக இருக்கின்றது - ஹவானா கர்தினால்


ஆக.04,2010. கியூபாவிலுள்ள 52 அரசியல் கைதிகளில் இருபது பேரை முதலில் விடுதலை செய்வதற்கு அரசு உறுதியளித்திருப்பது அந்நாட்டிற்கு நம்பிக்கை தரும் அடையாளமாக இருக்கின்றது என்று ஹவானா கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அலமினோ கூறினார்.

கியூபாவில் கைதிகள் விடுதலை செய்யப்படுவது அந்நாட்டு மக்களுக்குப் புதிதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அரசின் இந்நடவடிக்கை, வெளிநாடுகளின் உறவுகளுக்கு முக்கியமானது என்று கர்தினால் ஒர்த்தேகா மேலும் கூறினார்.

கியூபா அரசியல் கைதிகளை நடத்தும் முறையும் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக அந்நாட்டுக்கெதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதாரத் தடை இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கர்தினால் கூறினார்.

Knights of Columbus என்ற சகோதரத்துவ பக்த அமைப்பு வழங்கிய "Gaudium et Spes" என்ற விருதைப் பெற்றுக் கொள்ள வாஷிங்டன் சென்ற போது இவ்வாறு கூறினார் கர்தினால்.

ஏறக்குறைய 1,25,000 கியூப மக்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.