2010-08-04 16:17:14

இந்தியா - யானைகளிடம் ஆசிவழங்கும் பழக்கத்தை நிறுத்துவதற்குக் கோரிக்கை


ஆக.04,2010 பக்தர்கள் யானைகளிடம் ஆசி வாங்குதால் அவைகள் நோயினால் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்குவதால் இப்பழக்கத்தை நிறுத்துமாறு தமிழ்நாட்டு வனத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்துமத கோவில்களிலுள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட யானைகளின் நலன் கருதி இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ள அதிகாரிகள், இப்பழக்கத்தால் யானைகள் காசநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்ற கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அண்மை ஆண்டுகளில் நான்கு கோவில் யானைகள் காசநோய் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.

சில கோயில்களில் நாள்தோறும் 500 முதல் 600 பக்தர்களின் தலைகளை தனது துதிக்கையால் தொட்டு யானைகள் ஆசி வழங்குகின்றன என்றும் இப்படி செய்யும் போது அவர்களின் தலையில் உள்ள பேன், ஈறு மற்றும் பிற கிருமிகளை யானை தனது மூச்சோடு உள்ளிழுத்துக்கொள்ளும் வாய்ப்பிருப்பதாகவும் தமிழகத் தலைமை வன உயிர்க்காப்பாளர் ஆர் சுந்தர்ராஜூ கூறினார்.







All the contents on this site are copyrighted ©.