2010-08-03 15:53:46

பாகிஸ்தானில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம் பெறும் வன்முறையைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம்


ஆக.03,2010 பாகிஸ்தானில் கிறிஸ்தவருக்கெதிராக இடம் பெற்ற மிகவும் கொடூரமான வன்முறையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு இரண்டாயிரத்துக்கு அதிகமான மக்கள் ஃபாய்சலாபாத்தில் பேரணி ஒன்றை நடத்தினர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள கோஜ்ரா நகருக்கு அருகில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் வீடுகளை, 2009ம் ஆண்டு ஆகஸ்டில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் சூறையாடி எரித்தனர். இதில் எட்டுப் பேர் இறந்தனர்.

இப்பேரணியின் முடிவில் கோஜ்ரா கத்தோலிக்க ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்திய ஃபாய்சலாபாத் ஆயர் ஜோசப் கூட்ஸ், இந்தப் பேரணியில் சில முக்கிய முஸ்லீம் தலைவர்கள் பேசியதைக் குறிப்பிட்டுப் பேசினார்.

இதில் பேசிய முஸ்லீம் தலைவர்கள், கிறிஸ்தவர்க்கெதிராக இடம் பெற்ற அந்த வன்முறையைக் கண்டித்த அதேவேளை, இவ்வாறு செய்பவர்கள் முஸ்லீம்கள் என அழைக்கப்படத் தகுதியற்றவர்கள் என்று குறை கூறினர்.








All the contents on this site are copyrighted ©.