2010-08-03 15:55:33

சர்வதேச கொத்து வெடிகுண்டுகள் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தாய்லாந்திற்கு JRS அழைப்பு


ஆக.03,2010. சர்வதேச கொத்து வெடிகுண்டுகள் தடை ஒப்பந்தத்தில் தாய்லாந்து நாடு கையெழுத்திடுமாறு அந்நாட்டில் பணியாற்றும் JRS என்ற இயேசு சபை அகதிப்பணி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆகஸ்ட் முதல் தேதியன்று சர்வதேச கொத்து வெடிகுண்டுகள் தடை ஒப்பந்தம் உலகில் அமல்படுத்தப்பட்டதைச் சிறப்பித்த போது இவ்வாறு வேண்டுகோள் விடுத்தது JRS அமைப்பு.

தாய்லாந்து நாடு இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு அழைப்பு விடுக்கும் மனுவையும், தாய்லாந்து பிரதமர் Abhisit Vejjajiva விடம் JRS ஒருங்கிணைப்பாளர் Sermsiri Ingavanisa சமர்ப்பித்துள்ளார்.

தற்சமயம் இந்தச் சர்வதேச கொத்து வெடிகுண்டுகள் தடை ஒப்பந்தத்தில் 107 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன; மற்றும் 38 நாடுகள் அதனை அமல்படுத்தியுள்ளன.







All the contents on this site are copyrighted ©.