2010-08-03 15:52:47

ஃப்ளாரிடா கிறிஸ்தவக் குழுவின் குரான் எரிப்புத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு அமெரிக்க அரசைக் கேட்டுள்ளார் இந்தோனேசியப் பேராயர்


ஆக.03,2010. மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஃப்ளாரிடா கிறிஸ்தவக் குழுவின் இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துமாறு அந்நாட்டு அரசைக் கெஞ்சிக் கேட்டுள்ளார் இந்தோனேசியப் பேராயர் Hieronymus Herculanus Bumbun.

Dove World Outreach Center என்ற கிறிஸ்தவ அமைப்பு, “சர்வதேச குரான் எரிப்பு தினம்” என்று கடைபிடித்து அந்நாளில் குரானை எரிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டிய பேராயர் Bumbun, இத்தகைய நடவடிக்கை, இந்தோனேசியாவில் கிறிஸ்தவருக்கெதிரான வன்முறையைத் தூண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த வன்முறைகள் ஆலயங்களை எரித்தல் அல்லது கட்டங்களுக்கு உரிமை பெறுவதைக் கடினமானதாக்கும் என்று கூறியுள்ள பேராயர், முஸ்லீம்கள் அதிகமாக வாழும் ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் மக்கள் மத்தியில் வகுப்புவாத வன்முறைகளைத் தூண்டக்கூடும் என்று கூறியுள்ளார்.

1986ம் ஆண்டு செப்டம்பரில் Dove World Outreach Center தொடங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.