2010-08-02 15:48:42

ஆகஸ்ட் 03 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஆல்பிரட் பெர்ன்ஹார்டு நொபெல் என்ற சுவீடன் நாட்டு அறிவியலாளர் பற்றித் தெரியாதவர்கள் சிலரே இருக்க முடியும். இவர் டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தவர். அணுசக்தியைக் கண்டறிந்தவர். ஒருசமயம் இவர் கப்பல் பயணம் மேற்கொண்டு தனது அணுகுண்டுகளை வியாபாரம் செய்யும் சமயத்தில் பயங்கர வெடி சப்தம் கேட்டது. இவரின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் இவர் இறந்துவிட்டதாக செய்தித் தாள்களில் செய்தியை வெளியிட்டனர். இதன்மூலம் இவரின் பணத்தையும் அபகரிக்க முயற்சிகள் செய்தனர். சிலநாட்கள் கழித்து நொபெல் தமது இல்லிடம் திரும்பினார். அங்கு அவரது புகைப்படத்துக்கு மலர்வளையம் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். அப்போது ஓர் உயில் எழுதினார். தனது சொத்துக்கள் அனைத்தும் உலக மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்பட வேண்டுமென அதில் எழுதினார்.

அனுபவம் ஒரு முதிர்ச்சியான ஆசிரியர். முதலில் தேர்வு வைக்கிறது. பின்னர்தான் பாடம் கற்பிக்கிறது.

ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகிய அறிவியலாளர்கள் அணுஆயுதத்தைத் தயாரிக்குமாறு அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டிற்கு 1939ம் ஆகஸ்ட் 2ம் தேதி கடிதம் எழுதினார்கள் என்பது வரலாறு








All the contents on this site are copyrighted ©.