2010-07-30 16:09:40

மெக்சிகோவில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஆயர் அழைப்பு


ஜூலை30,2010: மெக்சிகோ நாட்டில் தொடர்ந்து இடம் பெற்று வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அந்நாட்டு ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மெக்சிகோவில் வன்முறைகள் அதிகரித்து வருவது இந்த நம் காலத்தின் அடையாளமாக மாறி வருகின்றது என்று அந்நாட்டு ஆயர்கள் அண்மையில் எச்சரித்ததைச் சுட்டிக்காட்டிய ஆயர் Sanchez Martinez, போதைப்பொருள் வியாபாரிகள், மனித வியாபாரம் செய்வோர், ஆயுத வியாபாரிகள் ஆகியோரால் நடத்தப்படும் வன்முறைகள், மற்றும் பலவகையான வன்முறைகளைக் கண்டித்துள்ளார்.

போதைப்பொருள் வியாபாரம், ஆயுத வியாபாரம் ஆகியவை தொடர்புடைய நாடுகள் சர்வதேச அளவில் நடவடிக்கைகள் எடுக்கவில்லையெனில் இவற்றை ஒழிப்பதற்கு மெக்சிகோ நாட்டினால் எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றியைத் தராது என்றும் ஆயர் எச்சரித்தார்.

இந்தச் சமூகத் தீமைகள் குறித்து பிறரையோ அல்லது கடந்த காலத்தையோ குறை கூறிக்கொண்டிராமல் அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் உடனடியாகச் செயல்படுமாறு மெக்சிகோ மக்களைக் கேட்டுக் கொண்டார் ஆயர் மார்ட்டினெஸ்

மேலும், தென் மெக்சிகோவின் Oaxacaவில் 80 வயதாகும் அருள்தந்தை Carlos Salvador Wotto, இப்புதனன்று கொல்லப்பட்டுள்ளார். இக்கொலைக்குத் திருடு காரணமாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.