2010-07-30 16:07:36

சீனக் கத்தோலிக்கர் திருத்தந்தைக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதற்கு வத்திக்கான் அதிகாரி ஒருவர் பாராட்டு


ஜூலை30,2010: சீனக் கத்தோலிக்கக் குருக்களும் ஆயர்களும் அகில உலக உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையுடன் கொண்டுள்ள சான்றுடன்கூடிய ஐக்கியத்திற்குத் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார் திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் ஐவன் டயஸ்.

சீனக் குருக்கள் மற்றும் ஆயர்களுக்கென வெளிப்படையாகக் கடிதம் எழுதியுள்ள கர்தினால் டயஸ், இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்திலும் அவரது நற்செய்தியைப் பரப்புவதற்குமான முயற்சிகளிலும் இவர்கள் தொடர்ந்து உறுதியாய் இருக்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார்.

சீன ஆயர்களும் குருக்களும் ஒன்றிப்பின் பணியாளர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லி, அவர்களின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால், திருப்பீடத்துக்குப் பிரமாணிக்கமாய் இருப்பதால் அண்மைக் காலங்களில் இவர்களில் சிலர் எதிர்நோக்கிய துன்பங்கள் பற்றித் தான் தெரிந்தே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சீனக் கத்தோலிக்கர், திருத்தந்தைக்குக் காட்டும், தைரியமும் எடுத்துக்காட்டும் நிறைந்த பிரமாணிக்கம் ஆண்டவரின் விலைமதிப்பில்லாதக் கொடை என்றும் கர்தினால் டயசின் கடிதம் கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.