2010-07-30 16:13:19

காஷ்மீர் நிலவரம் கவலை அளிக்கிறது: பான்-கி-மூன்


ஜூலை30,2010: காஷ்மீரில் அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் கலவரங்கள் கவலை அளிப்பதாக உள்ளது என ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சண்டைகளால் அங்குள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். கடையடைப்பு, ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இப்போது அங்கு அமைதி திரும்பியுள்ளது பெரும் நிம்மதி அளிக்கிறது என்று கூறப்ப்டடுள்ளது.

இந்நிலையில், பிரச்சனையில் சம்பந்தப்பட்ட காஷ்மீர் மாநிலத் தலைவர்கள் நிதானத்துடன் செயல்பட்டு அங்கு அமைதி நிலவ உதவ வேண்டும் என பான் கி மூன் பரிந்துரைத்துள்ளார்.

மேலும், இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே காஷ்மீர் பிரச்சனைதான் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ளது. இவ்விடயத்தில் இரு நாடுகளின் ஆட்சியாளர்களும் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டு சுமூக உடன்பாடு எட்ட முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் பான் கி மூன்.








All the contents on this site are copyrighted ©.