2010-07-30 16:06:04

இறைவனின் உதவியின்றி யாரும் திருச்சபையை வழிநடத்த முடியாது - திருத்தந்தை


ஜூலை30,2010: இறைவனின் உதவியின்றி எவரும் திருச்சபையை வழிநடத்த முடியாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழன் மாலை கூறினார்.

கடந்த ஐந்தாண்டுகளில் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பணியில் முக்கிய தருணங்கள் மற்றும் திருச்சபையின் வாழ்வு பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்த பின்னர் பேசிய அவர், திருச்சபை இளமையாகவும், முழுவதும் பன்மைத்தன்மையைக் கொண்டதாகவும் உள்ளது எனவும் கூறினார்.

புனித பேதுருவின் வழிவருபவரின் பங்கானது, திருச்சபைக்குள் ஒன்றிப்பை ஏற்படுத்துவதில் காணக்கூடிய விதத்திலும் தெளிவாகவும் இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

Bayerischer Rundfunk என்ற ஜெர்மனியின் பவேரியன் ஒலிபரப்புக் கம்பெனி தயாரித்த "ஐந்தாண்டுகள்: திருத்தந்தை 16ம் பெனடிக்ட்" என்ற தலைப்பிலான ஆவணப்படம் இவ்வியாழன் மாலை காஸ்தெல் கண்டோல்போவில் திருத்தந்தைக்குக் காண்பிக்கப்பட்டது.

இந்தப்படத் தயாரிப்பில் ஈடுபட்ட எல்லாருக்கும் தனது பாராட்டைத் தெரிவித்தத் திருத்தந்தை, இதனைப் பார்த்த போது இது ஓர் அசாதாரண ஆன்மீகப் பயணமாக இருந்தது என்றும், இது தனது பாப்பிறைத் தேர்தலிலிருந்து, திருச்சபை மற்றும் தனது பணிகளில் இடம் பெற்ற முக்கியமான நிகழ்வுகளை மீண்டும் பார்த்து புத்துயிர் பெறும் வாய்ப்பைத் தந்தது என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.