2010-07-29 15:09:24

மியான்மாரில் ஒரு கிறிஸ்தவ கிராமம் பர்மா இராணுவத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டது


ஜூலை 29, 2010 மியான்மாரின் அரசுத் தலைவர் இந்தியாவில் பயணம் மேற்கொள்வதற்கு முன், கிழக்கு மியான்மாரில் இருந்த ஒரு கிறிஸ்தவ கிராமம் பர்மா இராணுவத்தால் முற்றிலும் அழிக்கப்பட்டது.
கடந்த வெள்ளியன்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்த தகவல்கள், இப்புதனன்று வெளியாயின. இத்தகவல்களின் படி, இராணுவத்தினர் Karen மாநிலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ கிராமத்தில் 50 வீடுகளை எரித்ததாகவும், அங்கிருந்து 600 கிறிஸ்தவர்கள் பயந்து வெளியேறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.இத்தாக்குதலுக்குப் பின், மியான்மாரின் அரசுத் தலைவர் Than Shwe இந்தியாவுக்குச் சென்ற போது, மியான்மாரில் நிலவும் அரசியல் சூழலால் நாட்டை விட்டு வெளியேறியுள்ள பலர் புது டில்லியில் பிரதம மந்திரி மன்மோகனைச் சந்தித்து, மியான்மாரின் அரசுத் தலைவரின் வருகை குறித்த தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.