2010-07-29 15:08:53

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அருட்சகோதரி மீனா பர்வா அப்பகுதி கிறிஸ்தவர்களுக்கு ஒர் ஒளி விளக்காகத் திகழ்கிறார்


ஜூலை 29, 2010 ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்து அடிப்படை வாதிகளால் நடத்தப்பட்ட வன்முறைகளின் போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அருட்சகோதரி மீனா பர்வா அப்பகுதி கிறிஸ்தவர்கள் மேற்கொண்டுள்ள பல போராட்டங்களுக்கு ஒர் ஒளி விளக்காகத் திகழ்கிறார் என்று ரூர்கேலா மறைமாவட்ட ஆயர் ஜான் பர்வா கூறினார்.
அருள்சகோதரி மீனாவின் வழக்கு நீதி மன்றத்தில் ஆரம்பமாகப் போகும் இந்த வேளையில், அருள்சகோதரியின் உறவினரும், ரூர்கேலா மறைமாவட்டத்தின் ஆயருமான ஜான் பர்வா செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
நற்கருணை ஆராதனை, திருப்பலி ஆகியவைகளாலும், மக்களின் செபங்களாலும் தினமும் சக்தி பெற்று வரும் அருள்சகோதரி, இந்த வழக்கைத் துணிவுடன் சந்திக்க முன் வந்திருப்பது அப்பகுதியில் வாழும் பழங்குடியினருக்குப் பெரும் உந்துசக்தியாக உள்ளதெனவும், அருள்சகோதரி தன்னைச் சந்திக்கும் போதெல்லாம், தன் ஆயர் பணிகளைத் துணிவுடன் செய்யத் தன்னை ஊக்குவிப்பதாகவும் ஆயர் ஜான் பர்வா கூறினார்.தன்னை வதைத்தவர்கள் மீது கோபம் இல்லை என்று கூறும் அருள்சகோதரி மீனா, தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென போராடுவதை விட, தன் மக்கள் துணிந்து முன் வந்து உண்மைகளை எடுத்துக்கூற வேண்டுமென்பதிலேயே அதிகம் ஆர்வமாய் இருக்கிறார் என்று ஆயர் மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.