2010-07-29 15:07:47

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் முன்னாள் திருத்தந்தை 13ம் லியோவின் பிறந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்


ஜூலை 29, 2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் முன்னாள் திருத்தந்தை 13ம் லியோவின் பிறந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
திருத்தந்தை 13ம் லியோ பிறந்த இருநூறாம் ஆண்டையொட்டி, அவரது பிறந்த இடமான Carpineto Romanoவுக்கு செப்டம்பர் 5ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் செல்வார் என்று வத்திக்கான் செய்தித்தாள் L’Osservatore Romanoல் இப்புதனன்று செய்தி ஒன்று வெளியானது.
பயண தினத்தன்று காலை திருத்தந்தை தான் இப்போது தங்கியுள்ள Castel Gondolfoலிருந்து காலை ஒன்பது மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் Carpineto Romanoவுக்குச் சென்று அங்கு அந்த நகரத்தின் மையத்திலுள்ள Monti Lepini சதுக்கத்தில் திருப்பலி நிகழ்த்துவார் என்று இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.சமுதாய நலன்களை மையமாகக் கொண்ட "Rerum Novarum" என்ற சுற்று மடலை எழுதிய திருத்தந்தை 13ம் லியோவின் பிறந்த இடத்திற்கு 6ம் பவுல், இரண்டாம் ஜான் பவுல் ஆகிய திருத்தந்தையரும் பயணங்கள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.