2010-07-29 14:12:51

ஜூலை 30 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


762 - பாக்தாத் நகரம் உருவாக்கப்பட்டது.

1502 - கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடற்பயணத்தின் போது ஹொண்டுராஸ் நாட்டை அடைந்தார்.

1629 - இத்தாலியில் நேப்பிள்சில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

1756 – ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.

1825 - பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1971 - அப்பல்லோ 15இல் சென்ற டேவிட் ஸ்காட், ஜேம்ஸ் இர்வின் ஆகிய இருவரும் லூனார் ரோவர் வாகனத்துடன் சந்திரனில் இறங்கினர்.

1971 - ஜப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் 162 பேர் கொல்லப்பட்டனர்.

1980 - பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிடமிருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.








All the contents on this site are copyrighted ©.