2010-07-29 15:10:02

Niger நாட்டில் உணவு பற்றாக்குறையைக் களைய கத்தோலிக்க அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது


ஜூலை 29, 2010 Niger நாட்டில் ஏற்பட்டு வரும் மிக ஆபத்தான உணவு பற்றாக்குறையைக் களைய கத்தோலிக்க அமைப்பு ஒன்று பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் மூன்று மடங்கு உணவு பற்றாக்குறையைச் சந்தித்து வரும் Niger நாட்டில், 10 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பதைத் தடுக்க இங்கிலாந்தைச் சார்ந்த CAFOD என்ற கத்தோலிக்க நிறுவனம் முழு வீச்சில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உணவு பற்றாக்குறை நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருவதாகவும், பல ஆயிரம் குடும்பங்கள் பல நாள்கள் பட்டினியில் வாடும் நிலை அதிகரித்து வருவதாகவும் 2 லட்சம் குழந்தைகள் உணவு பற்றாக்குறையினால் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் CAFOD நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரி Philippe Mougin கூறினார்.கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, கத்தோலிக்க துயர்துடைக்கும் அமைப்பு ஆகிய பல அமைப்புகள் வழியாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிகள் அனைத்தையும் மிஞ்சும் வண்ணம் Niger நாட்டின் உணவு பற்றாக்குறை பெருமளவில் உயர்ந்துள்ளதென Philippe Mougin மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.