2010-07-28 17:03:12

ஸ்பெயினில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த காளைச் சண்டைகள் சட்ட பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன


ஜூலை 28, 2010 ஸ்பெயினில் Catalonia பகுதியில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த காளைச் சண்டைகள் இப்புதனன்று சட்ட பூர்வமாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
Catalonia பகுதி சட்டமன்றத்தில் காளைச் சண்டைகளைத் தடை செய்வது குறித்த விவாதங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இந்த விவாதங்களின் முடிவாக, இப்புதன் காலையில் 135 பேர் கொண்ட இந்த அவையில் 68 பேர் ஆதரவுடன் இந்தத் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தடைச் சட்டம் 2012ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காளைச் சண்டைகள் என்ற பெயரில் காளைகள் கொடுமைகள் பலவற்றிற்கு ஆளாவது குறித்து, மிருகங்களுக்கு ஏற்படும் பல கொடுமைகளை எதிர்ப்பவர்கள் பல ஆண்டுகளாய் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைத்துள்ளதென செய்திகளும், ஊடகங்களும் கூறுகின்றன.Catalonia வின் பார்சலோனா நகரில் இயங்கி வந்த இந்தக் காளைச் சண்டை அரங்கத்தில் பல பெரிய அங்காடிகள் கட்டப்படும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.