2010-07-28 17:02:59

பில்லி சூனியத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறி, விலக்கி வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு உதவி செய்யும் கத்தோலிக்க அமைப்பு


ஜூலை 28, 2010 Burkina Fasoவில் மந்திரம், பில்லி சூனியம் இவைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறி, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள வயதான பெண்களுக்கு பணி செய்யும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ள Bokin மையம் என்ற கத்தோலிக்க அமைப்பை அந்நாட்டின் மனித உரிமை மேம்பாட்டுத் துறை அமைச்சர் Salamata Sawadogo அண்மையில் பார்வையிட்டார்.
வயதான இப்பெண்மணிகள் இப்படிப்பட்ட சந்தேகத்தால், சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்டு, சிலசமயங்களில் பலவிதக் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுவதால், இந்த மையம் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டதெனக் கூறும் பங்குத் தந்தை Georges Godo, இவர்களை மீண்டும் அவர்களது சமுதாயங்களில் ஒன்றிணைப்பது பெரும் சவால் என்று கூறினார்.முப்பது பெண்களுக்குத் தற்போது பணிசெய்து வரும் இந்த மையத்தைப் பார்வையிட்ட அமைச்சர், பொதுவாக பெண்களை, அதுவும் வயதானப் பெண்களை சமுதாயத்திலிருந்து விலக்கி வைப்பது கண்டனத்திற்குரியதெனக் கூறிய அதே வேளை, அவர்களுக்கு உதவிகள் செய்யும் கத்தோலிக்க மையத்திற்கு தன்னால் இயன்ற அளவு அரசின் உதவிகளைப் பெற்றுத் தருவதாக வாக்களித்தார்.







All the contents on this site are copyrighted ©.