2010-07-28 17:01:00

கர்தினால் Newmanன் பரிந்துரையால் குணமான தியாக்கோன் திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியில் உதவி செய்வார்


ஜூலை 28, 2010 கர்தினால் John Henry Newmanன் பரிந்துரையால் குணமானதாகச் சொல்லப்படும் தியாக்கோன் Jack Sullivan திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியில் உதவி செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.
Boston உயர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த Jack Sullivan என்பவருக்கு தண்டுவடத்தில் ஏற்பட்ட குறை ஒன்று கர்தினால் Newmanன் பரிந்துரையால் குணமானதால், செப்டெம்பர் 19ம் தேதி கர்தினால் Newman முத்திபேறு பெற்றவராய் உயர்த்தப்படும் அந்தத் திருப்பலியில் தியாக்கோன் Sullivan விவிலியத்தை வாசித்து, திருத்தந்தைக்குத் திருப்பலியில் உதவி செய்வார் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
தியாக்கோன் Sullivan, அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினர் Birmingham உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Bernard Longleyன் விருந்தினர்களாகத் தங்கியிருப்பர் என்று அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.மேலும், திருத்தந்தை இங்கிலாந்தில் மேற்கொள்ளும் திருப்பயணத்தையொட்டி, அந்நாட்டில் கர்தினால் Newmanன் உருவம் தாங்கிய ஒரு தபால் வில்லையும், திருத்தந்தையின் உருவம் தாங்கிய ஒரு தபால் வில்லையும் கர்தினால் Newman இறந்த நாளான ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியிடப்படும் என்று வேறொரு செய்திக் குறிப்பு கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.