மியான்மார் அதிபர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஜூலை27,2010: மியான்மாரில் ஜனநாயக ஆட்சி அமைக்கப்படுவதற்கு அந்நாட்டு இராணுவ அரசின் அதிபர்
Than Shwe ஐ இந்தியா வலியுறுத்துமாறு மியான்மார் ஜனநாயக ஆர்வலங்கள் புதுடெல்லியில் போராட்டத்தை
நடத்தினர்.
மியான்மார் அதிபர் Shwe, இந்தியாவில் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தைத்
தொடங்கியுள்ளதையடுத்து மியான்மாரில் ஜனநாயகம் கொண்டுவரப்படுவதற்கு இந்திய அரசு தனது செல்வாக்கைப்
பயன்படுத்துமாறு, மியான்மார் ஜனநாயக ஆர்வலர்கள், அகதிகள் என ஏறக்குறைய 300 பேர் புதுடெல்லியில்
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மியான்மார் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சு கீ உட்பட
அந்நாட்டின் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு இந்தியப்
பிரதமர் மன்மோகன்சிங், மியான்மார் அதிபரை வற்புறுத்துமாறும் அந்த ஆர்ப்பாட்டத்தினர் கோரிக்கைகளை
எழுப்பினர்.
இந்தியாவி்ல் இஞ்ஞாயிறன்று ஐந்து நாட்கள் கொண்ட சுற்றுப்பயணத்தைத்
தொடங்கியுள்ள மியான்மார் இராணுவ அதிபர், இந்திய அரசுத்தலைவர், பிரதமர் என முக்கிய இந்தியத்
தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
மியான்மார் இராணுவ அரசின் மனித உரிமை மீறல்கள்
குறித்து சர்வதேச கவலைகள் இருந்தாலும், இந்தியா அண்மை ஆண்டுகளில் மியான்மார் நாட்டுடன்
உறவுகளை பலப்படுத்தி வருவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.