2010-07-27 15:03:50

இந்தியா: காமன்வெத் விளையாட்டுப் போட்டிகளுக்கானத் தயாரிப்புப் பணிகள் கவலை அளித்துள்ளன


ஜூலை27,2010: இந்தியாவில் வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கின்ற காமன்வெத் விளையாட்டுப் போட்டிகளுக்கானத் தயாரிப்புப் பணிகளின் ஒருகட்டமாக ஏழைகளும் வீடற்றவர்களும் அப்புறப்படுத்தப்பட்டிருப்பது குறித்தத் தங்களது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.

புதுடெல்லியில் வருகிற அக்டோபர் 3 முதல் 14 வரை நடைபெறவிருக்கின்ற காமன்வெத் விளையாட்டுப் போட்டிகள் தொடர்புடைய வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன, மேலும் நாற்பதாயிரம் குடும்பங்கள் புலம் பெயரக் கட்டாயப்படுத்தப்படக்கூடும் என்று குடியிருப்பு மற்றும் நிலஉரிமை அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

இவ்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்த இந்திய ஆயர் பேரவையின் தொழில் ஆணையச் செயலர் அருள்திரு ஜோஸ் வட்டக்குழி, இத்தகைய பெரிய நிகழ்ச்சியை நடத்தும் அளவுக்கு இந்தியா இன்னும் பக்குவம் அடையவில்லை என்று கூறினார்.

இந்த விளையாட்டுத் தொடர்புடைய கட்டுமானப் பணிகளில் குறைந்தது 64 தொழிலாளர் இறந்துள்ளனர் மற்றும் வேலையாட்களுக்குச் சரியான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் அருள்திரு வட்டக்குழி குறை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.