2010-07-26 15:42:25

டச்சு குருவின் வெளியேற்ற உத்தரவு குறித்து விசாரிக்க உள்ளதாக உறுதியளித்துள்ளார் காஷ்மீர் முதல்வர்


ஜூலை 26, 2010 காஷ்மீரிலிருந்து டச்சு குரு Jim Borst வெளியேற வேண்டும் என்ற அரசு உத்தரவு குறித்து, தான் விசாரிக்க உள்ளதாக உறுதியளித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா.
காஷ்மீர் மாநில முதல்வரைச் சந்தித்தபின் பத்திரிகையாளர்களிடம் இத்திங்களன்று இதனைத் தெரிவித்த அப்பகுதி ஆயர் பீட்டர் செலஸ்டீன் எலம்பஸேரி, இவ்வெளியேற்ற உத்தரவு குறித்து திருச்சபை கவலைக் கொள்ள வேண்டாம் எனவும், இதற்குத் தீர்வு காண தான் தனிப்பட்ட முறையில் உதவ உள்ளதாகவும் மாநில முதல்வர் தன்னிடம் உறுதி வழங்கியதாகவும் கூறினார்.
2014ம் ஆண்டு வரை இந்தியாவில் தங்குவதற்கென அனுமதியைப் புதுப்பித்துள்ள குரு Jim Borstக்கு, நாட்டை விட்டு வெளியேறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளதில் உள்ள குளறுபடிகளையும் மாநில முதல்வருடன் ஆன தனது சந்திப்பின் போது விளக்கியதாகவும் கூறினார் ஆயர் எலம்பஸேரி.1963ம் ஆண்டு முதல் காஷ்மீரில் பணியாற்றிவரும் டச்சு குரு Jim Borst நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கடந்த மாதம் 26ந் தேதி உத்தரவிட்டது இந்தியாவின் வெளிநாட்டவர்க்கான பதிவு அலுவலகம்.







All the contents on this site are copyrighted ©.