2010-07-26 15:43:13

ஆஸ்திரேலியாவின் புதிய குடியேற்றதாரர் சட்டம் குறித்து தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்


ஜூலை 26, 2010 எவ்விதத் தொலைநோக்குப் பார்வையும் இன்றி, குடியேற்றதாரர் எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைக்க முயலும் ஆஸ்திரேலிய அரசின் திட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
தாங்கள் மீண்டும் பதவிக்கு வந்தால், குடியேற அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையை 3 இலட்சத்தில் இருந்து 1 இலட்சத்து 70 ஆயிரமாக குறைக்க உள்ளதாக ஆஸ்திரேலியாவின் தற்போதையக் கூட்டணி ஆட்சி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து தன் கருத்துக்களை வெளியிட்டுள்ள தலத்திருச்சபை, குடியேற்றதாரர்கள் சமுதாயத்திற்கு ஆற்றியுள்ள பங்கைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவாக இதுத் தெரிவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
பிறப்பெண்ணிக்கை குறைந்து வரும் ஆஸ்திரேலியாவின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவி, பல கலாச்சாரம் மற்றும் மதங்களின் சமூகமாக ஆஸ்திரேலியா உருவாக உதவியுள்ள குடியேற்றதாரர்களின் பங்களிப்பு மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.ஆஸ்திரேலியாவிற்குள் குடியேற விரும்பும் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் நாட்டிற்கு எவ்வித பொருளாதார இலாபமும் கிட்டப்போவதில்லை மாறாக அவர்கள் மூலம் கிட்ட உள்ள விலைமதிப்பற்ற பங்களிப்பு இழக்கப்படும் என்கின்றனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்.







All the contents on this site are copyrighted ©.