2010-07-24 15:05:11

ஹெய்ட்டியின் மறுசீரமைப்புப் பணிகளுக்கென மேலும் பத்து திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் இசைவு


ஜூலை24,2010. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹெய்ட்டி நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்கென மேலும் பத்து திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் இசைவு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் ஹெய்ட்டி நாட்டை நிலநடுக்கம் தாக்கியவுடனே அமெரிக்க ஐக்கிய நாட்டு மறைமாவட்டங்கள் ஹெய்ட்டிக்கென எட்டு கோடி டாலருக்கு மேற்பட்ட நிதியை மக்களிடமிருந்து பெற்றன. தற்சமயம் 2,12,700 டாலர் பெறுமான திட்டங்களுக்கு உதவுவதற்கும் அமெரிக்க ஆயர்கள் தீர்மானித்துள்ளனர்







All the contents on this site are copyrighted ©.