2010-07-23 16:26:41

ஐ.நா. மிதிவெடி தடை ஒப்பந்தம் உலகஅளவில் செயல்படுத்தப்படுவதற்கு மதங்களும் பொதுநிலைத் தலைவர்களும் உழைக்குமாறு புத்தமதக்குரு அழைப்பு


ஜூலை23,2010 1999ம் ஆண்டில் அமலுக்கு வந்த ஐ.நா. மிதிவெடி தடை ஒப்பந்தம் உலகஅளவில் செயல்படுத்தப்படுவதற்கு மதங்களும் பொதுநிலைத் தலைவர்களும் உழைக்குமாறு அழைப்பு விடுத்தார் புத்தமதக்குரு Vy Sovechea

வெடிக்காமல் இன்னும் நிலத்தில் புதைந்து கிடக்கும் மிதிவெடிகளின் ஆபத்து குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கத்தில் இவ்வெள்ளிகிழமை கம்போடியாவின் சாம்லோட்டில் நடந்த கூட்டமொன்றில் இவ்வாறு அழைப்பு விடுத்தார் அந்தப் புத்தமதக் குரு.

கம்போடியாவில் மிதிவெடிகளால் தினமும் பலர் இறந்து கொண்டிருப்பது அந்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பிரச்சனையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச மிதிவெடி தடை ஒப்பந்தத்தை அமல்படுத்தியுள்ள 156 நாடுகளுள் கம்போடியாவும் ஒன்றாகும்.

கம்போடியாவில் 2007ம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன்வரை 1025 பேர் வெடிக்காத மிதிவெடிகளால் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.