2010-07-23 16:19:21

அருள்ததிரு ஜிம் போர்ஸ்ட் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று விடுக்கப்பட்ட ஆணை ஜம்மு காஷ்மீர் அரசுக்கு மறைவாய் உள்ளது


ஜூலை23,2010 இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அருள்திரு ஜிம் போர்ஸ்ட் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று விடுக்கப்பட்ட ஆணை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று, அம்மாநில முதலமைச்சர் ஓமர் அப்துல்லாவும் உள்துறை கமிஷனர் சாமுவேல் வர்கீசும் தெரிவித்ததாக ஊடகம் ஒன்று கூறுகிறது.

டச்சு நாட்டு கத்தோலிக்க மறைபோதகர் அருள்திரு ஜிம் போர்ஸ்ட், இம்மாதத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று விடுக்கப்பட்ட ஆணை தொடர்பாக ஜம்மு ஸ்ரீநகர் ஆயர் பீட்டர் செல்ஸ்டின் இவ்வரசுத் தலைவர்களை இவ்வியாழனன்று சந்தித்த போது இவ்வாறு அவர்கள் தெரிவித்ததாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மில்கி்ல் மறைபோதகச் சபையைச் சார்ந்த அருள்திரு ஜிம் போர்ஸ்ட் இந்தியாவில் 2014ம் ஆண்டு வரை இருக்கலாம் என்பதற்கான விசா அனுமதியை நான்கு மாதங்களுக்கு முன்னரே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.