2010-07-22 15:23:46

பொது இடங்களில் சிலுவைகள் வைக்கப்படலாம என்ற கருத்தை 20 ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருவதற்கான காரணங்கள் கூறப்பட்டுள்ளன


ஜூலை 22, 2010 பொது இடங்களில் சிலுவைகள் வைக்கப்படலாம் என்ற கருத்தை 20 ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருவதற்கான காரணங்கள் இவ்வியாழனன்று வத்திக்கானின் L'Osservatore Romano செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளன.
ஐரோப்பாவின் மனித உரிமை நீதிமன்றம் அமைந்துள்ள Strasbourgல் இயங்கி வரும் சட்டம் மற்றும் நீதிக்கான ஐரோப்பிய மையம் என்ற அரசு சாரா அமைப்பின் இயக்குனர் Gregor Puppinck எழுதியுள்ள இந்தக் கட்டுரையில், சிலுவைகள் இத்தாலிய அரசு பள்ளிகளில் இருந்து நீக்கப்பட வேண்டுமென்ற வழக்கில் ஐரோப்பாவின் மனித உரிமை நீதிமன்றம் இதுவரை சந்தித்திராத அளவு கருத்துக்கள் எழுந்துள்ளனவெனக் கூறியுள்ளார்.சிலுவைகள் வைக்கப்படவேண்டுமென இத்தாலி மேல்முறையீடு செய்ததை அடுத்து, ஐரோப்பாவின் மேலும் 20 நாடுகள் ஆதரவு தெரிவித்ததுள்ளது வெறும் அரசியல் அல்லது சட்ட மயமான காரணங்களுக்காக மட்டுமல்ல, மாறாக அந்நாடுகள் கூறும் காரணங்கள் ஆன்மீகப் பின்னணியிலும் எழுந்தவை என்று Gregor Puppinck தன் கட்டுரையில் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.