2010-07-22 13:12:37

ஜூலை 23 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1881 - அர்ஜென்டினாவுக்கும் சிலேவுக்குமிடையேயான எல்லைக்கோடு ஒப்பந்தம் புவனோஸ் ஐரிஸில் கையெழுத்திடப்பட்டது. இதே ஆண்டில் சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இது உலகின் மிகப்பழமையான விளையாட்டு அமைப்பாகும்.

1929 - இத்தாலியின் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது.

1942 - நாசி ஜெர்மனியரினால் போலந்தில் டிரெப்லின்கா வதை முகாம் யூதர்களுக்காக அமைக்கப்பட்டது. 1983 – இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியது.

1995 - ஹேல்-பாப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.

2006 - ஹரியானாவில் குருஷேத்திரத்தில் 60 அடி ஆழ் துளைக்குழியில் வீழ்ந்த சிறுவன் 50 மணி நேரத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.

2008 உலக வர்த்தக நிறுவனத்தில் கேப் வெர்தே நாடு 153 வது உறுப்பு நாடாக இணைந்தது.








All the contents on this site are copyrighted ©.