2010-07-22 15:23:06

ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதிகளில் இன்னும் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் தாங்கள் வாழ்ந்த இல்லங்களுக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள்


ஜூலை 22, 2010 ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்து இரு ஆண்டுகள் ஆகியும், இன்னும் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் தாங்கள் வாழ்ந்த இல்லங்களுக்குத் திரும்ப முடியாமல் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வன்முறைகளுக்கு உள்ளான கிறிஸ்தவர்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டு நிரந்தரமற்ற குடியிருப்புகளில் வாழ்வது, அதிலும் சிறப்பாக, மழைக் காலம் ஆரம்பமாகும் இந்த நிலையில் அவர்கள் இவ்வாறு வாழ்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலை என்று இப்புதனன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அருள்தந்தை Sisirkanta Sabhanayak கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து அவர்களுடன் போராடுவதே தனக்கு கொடுக்கப்பட்டுள்ள அழைப்பு என்று கத்தோலிக்க குரு Sabhanayak கூறினார்.2007ம் ஆண்டு டிசம்பரிலும், 2008ம் ஆண்டு ஆகஸ்ட்டிலும் இந்து மதத் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைகளில் 6,500 வீடுகள் எரிக்கப்பட்டன; 350 கோவில்கள், 45 கல்வி நிறுவனங்கள் சேதமடைந்தன; மற்றும் 50,000 மக்கள் தங்கள் குடியிருப்புகளை இழந்தனர் என்று செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.