2010-07-22 15:24:52

இலங்கையில் அமெரிக்காவின் அரசுத்துறைத் துணைச் செயலர்


ஜூலை 22, 2010 இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு நல்ல பலனைத் தரமுடியும் என்று அமெரிக்கா நம்புவதாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அரசுத்துறைத் துணைச் செயலர் ராபர்ட் ப்ளேக் கூறியுள்ளார்.
இலங்கைக்குச் சென்றுள்ள ராபர்ட் ப்ளேக், அங்கு இலங்கை அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் அமைதி திரும்ப நல்லிணக்கம் ஏற்படுவது மிகவும் அவசியம் என்று கூறியுள்ள ராபர்ட் ப்ளேக், நல்லிணக்கத்தை உருவாக்கும் ஒரு பகுதியாக போரினால் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இலங்கையில் குடியரசும், மனித உரிமைகளும் மேம்படுத்தப்படுதலை குறிப்பிட்டுள்ள ராபர்ட் ப்ளேக், மாநிலங்களுடன் சிறப்பான அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளலும், தொடர்புசாதன சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.