2010-07-21 15:08:56

தென் கொரியாவின் நான்கு நதி திட்டத்திற்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு


ஜூலை21,2010 தென் கொரியாவிலுள்ள நான்கு நதிகளையும் சீரமைக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அந்நாட்டின் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தென் கொரிய ஆயர் பேரவை, கொரிய நாட்டு கிறிஸ்தவ சபைகளின் குழு, Won புத்த மதக் குழு என பல்வேறு மதக் குழுக்கள் இணைந்து நடத்தும் இந்த போராட்டங்களின் ஒர் அங்கமாக, இத்திங்களன்று Seoulன் Myeongdong பேராலயத்தில் திருப்பலி ஒன்று நடந்ததென்றும், அந்தத் திருப்பலியில் 2000க்கும் மேற்பட்ட குருக்களும் விசுவாசிகளும் கலந்து கொண்டனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
‘நான்கு நதி திட்டம்’ என்ற இந்த முயற்சியால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், மக்களின் குடிநீர் பிரச்சனைகள் இன்னும் அதிகமாகும் வாய்ப்புக்கள் உருவாகும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு அமைப்பின் செயலர் அருள்திரு Yang Jae-seong கூறினார்.இதுவரை இந்தத் திட்டத்திற்கு 1800 கோடி டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.