2010-07-21 15:25:48

ஜூலை 22 – நாளும் ஒரு நல்லெண்ணம்


நன்றாக வாழ் என வாழ்த்தும் கை தான் வாழ்க்கை.

கையேந்தியவனுக்குக் கைப்பிடி அரிசியும் தராமல் கை விரிக்கும் கைகள் இரப்பதற்கேக் கை நீட்டும்.

நம் கைகளோ,

இரந்தோர்க்கு உணவிடுவதில் அன்னக்கை.

ஆறுதல் தருவதில் ஆண்டகை. ஆம், ஆண்டவன் கை.

உழைத்து ஊட்டுவதில் இயற்கை.

கொடுத்துச் சிவப்பதில் பொற்கை.

அவ்விதம் வருவது மட்டுமே உவகை.

நல்லவர்க்குக் காலம் கை கொடுக்கும்.

தீயவரையோ கை கழுவும்.

விதியின் கையோ,

நல்லவர்க்குக் கை விரித்து தீயவரைக் கை தூக்கி விடுவதாய் காட்டும். அது கானலின் கை.

ஆனால்,

கை கொடுத்து, கை கோர்த்து, கைப்பிடித்து, கைக்குள் வைத்துக் காத்து வருவதே கடவுளின் கை.

கை நழுவிப்போன காலங்களை மறந்துவிடுங்கள். அவை கைதவறி உடைந்ததாய் எண்ணிக்கொள்வோம்.

கை மேல் பலன் எதிர்பார்க்கிறீர்களா?

கை கூடும் கனவுகள் கை மீறிப் போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.







All the contents on this site are copyrighted ©.