2010-07-21 15:09:14

கருணைக் கொலையைச் (Euthanasia) சட்டமாக்க வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள வழக்கிற்கு எதிர்ப்பு


ஜூலை21,2010 கருணைக் கொலையைச் (Euthanasia) சட்டமாக்க வேண்டும் என்று இச்செவ்வாயன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள வழக்கிற்கு எதிராக No Less Human அதாவது, ‘மனிதப் பிறவிகளை விடக் குறைந்தவர்கள் இல்லை’ என்ற அமைப்பு தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.
54 வயதான Tony Nicklinson ஐந்து ஆண்டுகளுக்கு முன் முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்டார் என்றும், சக்கர நாற்காலியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தன் வாழ்வைச் செலவிடும் Nicklinson, கருணைக் கொலை மூலம் தன் வாழ்வை முடித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று நீதி மன்றத்தில் மனு செய்துள்ளார் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
உடல் குறையுள்ள மனிதர்கள், கருணைக் கொலை மூலம் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள அவர்கள் விரும்பினாலும், இந்த முறை சட்டமாக்கப்படுவதோ, அரசால் அனுமதிக்கப்படுவதோ மனித குலத்திற்கு எதிரான ஒரு செயல்பாடு என்று No Less Human குழுவின் உறுப்பினரான Janet Thomas கூறினார்.உடல் அளவில் எந்த நிலையில் இருந்தாலும், மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை என்பதை வலியுறுத்துவதே No Less Human என்ற தங்கள் குழுவின் நோக்கம் என்று Janet Thomas மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.