2010-07-21 15:08:30

ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்கிய அர்ஜென்டீனாவைப் போல், பெரு நாடு மாறிவிடக் கூடாது - கர்தினால் Juan Cipriani Thorne


ஜூலை21,2010 ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்கிய அர்ஜென்டீனாவைப் போல், பெரு நாடு மாறிவிடக் கூடாதென Lima உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Juan Cipriani Thorne கூறியுள்ளார்.
கடந்த வாரம் அர்ஜென்டீனா அரசு மேற்கொண்ட முயற்சி கண்டனத்திற்குரியதென சுட்டிக்காட்டிய கர்தினால் Cipriani, தொடர்ந்து நடைபெறவிருக்கும் பெரு நாட்டின் தேர்தல் பிரச்சாரங்களில் ஒரே பாலினத் திருமணங்களை சட்டமாக்கும் கருத்து இடம் பெறக் கூடாதென்ற அழைப்பையும் விடுத்தார்.எந்த ஒரு பொது நல ஊழியரும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்பவராக இருக்க வேண்டுமேயொழிய தங்கள் சுய கருத்துக்களையும், சுய நலனையும் மக்கள் மீது திணிக்கக் கூடாதென்றும் கர்தினால் Cipriani மேலும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.