2010-07-21 15:08:17

இத்தாலி நாடு தற்போது சந்தித்து வரும் கலாச்சார ஆபத்தை எதிர்கொள்ள கத்தோலிக்க அரசியல் வாதிகள் முன் வர வேண்டும் - கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ


ஜூலை21,2010 இத்தாலி நாடு தற்போது சந்தித்து வரும் கலாச்சார ஆபத்தை எதிர்கொள்ள கத்தோலிக்க அரசியல் வாதிகள் முன் வர வேண்டும் என்று வத்திக்கான் செய்தித்தாளான L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ (Bagnasco) கூறினார்.
சமுதாயப் பொது நலனில் அக்கறை கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலைக்குரிய போக்கு என்றுரைத்த கர்தினால் பஞாஸ்கோ, பிறரன்பு என்பதில் விசுவாசம் கொண்டுள்ள கத்தோலிக்கர்கள் முன் வந்து இந்த நிலையை மாற்றவேண்டும் என்றும், சிறப்பாக அரசியலில் இத்தகையோர் ஈடுபடுவது இத்தாலியின் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் கூறினார்.சமுதாய மாற்றங்கள் பலவும் மனிதர்களின் முயற்சியால் வரக்கூடியது, மனித முயற்சிகளை மீறிய மாற்றங்களுக்கே இறைவன் துணையைத் தேட வேண்டுமென கத்தோலிக்கத் திருச்சபை மனித சமூகத்தைப் பற்றி பல ஏடுகளில் கூறியுள்ள கருத்துக்களைச் சுட்டிக் காட்டிய கர்தினால் பஞாஸ்கோ, இன்றைய சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காண அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளையும் சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.