2010-07-20 15:52:15

பாகிஸ்தான் கிறிஸ்துவ இளையோர் குழு கைபர் கணவாய்ப் பகுதியில் நடத்திய முகாம்


ஜூலை20, 2010. பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்துவ இளையோர் குழு ஒன்று சுற்றுச்சூழல், மத நல்லிணக்கம் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகாம் ஒன்றை அண்மையில் நடத்தினர்.

சென்ற வாரம் மூன்று நாட்கள் இமய மலையின் கைபர் கணவாய்ப் பகுதியில், Saiful Muluk என்ற ஏரிக்கருகே நடத்தப்பட்ட முகாம் ஒன்றில் மருத்துவர், ஆசிரியர், மாணவர் என்று 86 இளையோர் கலந்து கொண்டு, மலைப்பகுதியில் உள்ள அந்த ஏரியில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் பல குப்பைகளை அகற்றினர்.

இயற்கையில் உள்ள குப்பைகளை அகற்றுவது சுற்றுச்சூழலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது போல், சமூகத்தில் உள்ள பிரிவுகளை அகற்றும் போது, சமூகச் சூழலும் முன்னேற வாய்ப்புண்டு என்று இந்த முகாம்களைக் கடந்த பத்து ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வரும் STANCE என்ற குழுவின் தலைவரான Saqib Khadim கூறினார்.

மத அடிப்படைவாதம், சகிப்புத் தன்மையற்ற நிலை, பிரித்தாளும் அரசியல், ஏழ்மை இவைகளே நாட்டின் சமுதாயச் சூழலை அதிகம் பாதிக்கும் கூறுகள் எனவே, இவைகளையும் நீக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுப்பட்டுள்ளோம் என்று இந்த முகாமில் கலந்து கொண்ட மருத்துவத் துறை மாணவர் ஜென்னிபர் பஷீர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.