2010-07-20 15:49:20

நேபாள அரசியலில் கிறிஸ்தவர்கள் அதிக ஈடுபாடு காட்டுமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு


ஜூலை20,2010. நேபாள அரசியலில் கிறிஸ்தவர்கள் ஆண்டுக்கணக்காய் ஓரங்கட்டப்பட்டுள்ள வேளை, கிறிஸ்தவர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டுமாறு அந்நாட்டு கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த ஜூன் 30ம் தேதி நேபாள பிரதமர் மாதவ் குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்நாடு அரசு இன்றி இருக்கின்றது. எனினும் இப்புதன் கிழமைக்குள் புதிய அரசை அமைக்குமாறு அரசுத்தலைவர் ராம் பரன் யாதவ்

நேபாளத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்துப் பேசிய காத்மண்ட் ஆயர் அந்தோணி ஷர்மா, கடந்த காலத்தில் கத்தோலிக்கர் அரசியலில் ஆர்வம் காட்டியதைத் தான் பார்த்ததே இல்லை, எனினும் இந்நாள்வரை எந்தத் தலைவரும் மக்கள் நலனில் உண்மையாகவே ஆர்வம் காட்டியதில்லை, எனவே கிறிஸ்தவர்கள் நேபாள அரசியலில் உயிரூட்டமுடன் செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளது என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.