2010-07-19 15:42:03

பாகிஸ்தான் லாகூர் நகர் தொழுகைக் கூடத்தை அந்நாட்டின் மதத்தலைவர்கள் பார்வையிட்டனர்


ஜூலை 19, 2010. பாகிஸ்தான் லாகூர் நகரில் இம்மாதத்தின் துவக்கத்தில் வெடிகுண்டால் பாதிக்கப்பட்ட Data Darbar Sufi தொழுகைக் கூடத்தை அந்நாட்டின் மதத்தலைவர்கள் அண்மையில் சென்று பார்வையிட்டனர்.



மதநல்லிணக்கம் ஏற்பட சிறுபான்மை மதத்தலைவர்கள் மேற்கொண்ட இந்தப் பயணம் மூலம் பாகிஸ்தானில் ஒப்புரவும், சகிப்புத் தன்மையும் வளரும் என்று நம்பிக்கை தெரிவித்தார் இப்பயணத்தை முன்னின்று நடத்திய அருள் தந்தை Francis Nadim.



பெரும்பான்மையாய் விளங்கும் முஸ்லிம்களுடன் மதக் கோட்பாடுகள் குறித்து நடத்தப்படும் விவாதங்கள் மேலும் பல குழப்பங்களை உண்டாக்கும் போது, மனிதாபிமான அடிப்படையில் துன்பத்தில் இருப்பவர்களுடன் அன்பைப் பகிர்ந்துகொள்ள மேற்கொள்ளப்படும் இது போன்ற பயணங்கள் மதநல்லிணக்கம் ஏற்பட உதவும் என்றும், தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள அனைத்து மதத் தலங்களையும் தங்கள் குழு பார்வையிடத் திட்டமிட்டிருப்பதாகவும் அருள்தந்தை Nadim கூறினார்.



லாகூர் தொழுகைக்கூடத்திற்கு வந்திருந்த சிறுபான்மையினர் குழுவுக்கு அத்தொழுகைக் கூடத்தின் தலைவர் Rao Fazal-ur-Rehman நன்றி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.