2010-07-19 14:35:46

ஜூலை 20 நாளும் ஒரு நல்லெண்ணம்


மனிதர்கள் நிலவைத் தொட்டுவிட்டு வந்து நிலத்தைத் தொட்டவுடன் நிருபர்கள் கூட்டம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அவர்களிடம் கேள்விகளையும் அடுக்கியது. ஒரு நிருபர் கேட்டார் – ஆமாம். நிலவிலிருந்து பூமிப்பந்தைப் பார்த்தீர்களா? அது எப்படி இருந்தது? என்று. அதற்கு அவர்கள், ஓ! அதுவா! என்ன அழகு! என்ன அழகு! பூமி நிலவைவிட எட்டு மடங்குப் பெரிதாகத் தெரிந்தது. பூமி நிலவைவிட பத்து மடங்கு ஒளி வீசியது என்று வருணித்துக் கொண்டே இருந்தனர். அப்பொழுது மற்றொரு நிருபர் அவர்களிடம், சரி, அங்கே நிலவு எப்படி இருந்தது? என்று கேட்டார். அதற்கு அவர்கள், இந்தப் பூமியைப் போலவே அதுவும் படு சாதாரணமாக இருந்தது என்றார்கள்.

நாம் வாழும் இந்தப் பூமித்தாய் அழகானவள் என்பதை சக மனிதனுக்கு உணர்த்த மனிதன் நிலவுக்குப் போகவேண்டியிருக்கிறது. 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி அப்பல்லோ 11 விண்கலம் நிலவில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் நிலவில் கால் பதித்தனர்.








All the contents on this site are copyrighted ©.